தமிழகம் வரும் பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு நேரில் சந்தித்துப் பேசுகிறார்.
தூத்துக்குடி விமான நிலையத்தின் ஓடுதள விரிவாக்கம் உட்பட பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார்.
தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழாவில் பங்கேற்ற பின்னர் திருச்சி சென்று அங்குள்ள தனியார் விடுதியில் தங்குகிறார்.
அங்கு, இரவு பத்து மணிக்கு மேல் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்துப் பேச உள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக மீண்டும் இணைந்த பிறகு முதல்முறையாகத் தமிழகம் வரும் பிரதமர் மோடியைச் சந்திக்கும் இபிஎஸ், முக்கிய விவகாரங்கள் குறித்துப் பேசவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் பல கட்சிகளை இணைப்பதற்கான ஆலோசனையும் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.