சீன ஊடகக் குழுமத்தின் ஆசிய-ஆப்பிரிக்க மையமும், இக்குழுமத்தின் ஹைய்நான் கிளையும் இணைந்து நடத்திய ஹைய்நானில் சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களின் பயணம் மற்றும் “ஆசியான் கூட்டாளிகள்” எனும் ஊடக கருத்தரங்கின் துவக்க விழா ஆகஸ்ட் 18ஆம் நாள் சன் யாவில் நடைபெற்றது.
துவக்க விழாவில் ஹைய்நான் மாநிலத்தின் பரப்புரை துறை தலைவர் வாங் பின் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளில், ஹைய்நானுக்கும் ஆசியானுக்கும் இடையேயான வர்த்தக ஒத்துழைப்பு ஆழமாகி வருகிறது என்றும், சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பை ஹைய்நான் பன்முகங்களிலும் ஆழமாக்குவது, ஹைய்நானின் தாராள வர்த்தக துறைமுகக் கட்டுமானம் ஆகியவற்றுக்கு ஆசியான் நாடுகளின் ஆதரவு முக்கியம் என்றும் தெரிவித்தார்.
ஆசிய-ஆப்பிரிக்க மையத்தின் துணை தலைவர் சாங் ஹுய் அம்மையார் கூறுகையில், இந்த ஊடக நிகழ்வுகளின் மூலம், சீனாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையேயான ஊடக ஒத்துழைப்பை மேலும் முன்னேற்ற வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தார்.
இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம் மற்றும் மலேசியா உள்ளிட்ட 9 ஆசியான் நாடுகளைச் சேர்ந்த 29 ஊடகப் பணியாளர்கள் ஆகஸ்ட் 18 முதல் 24ஆம் நாள் வரை ஹைய்நான் தீவைச் சுற்றியுள்ள நெடுஞ்சாலையின் வழியாக சுற்றுலா பயணம் மேற்கொண்டு, ஹைய்நான் தாராள வர்த்தக துறைமுகத்தின் புதிய மேம்பாடு மற்றும் உயிராற்றலை உணர்ந்து கொள்ளவுள்ளனர்.