போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2025ஆம் ஆண்டு கூட்டம் பற்றிய செய்தியாளர் கூட்டம் ஜனவரி 9ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2025ஆம் ஆண்டு கூட்டம் மார்ச் 25ஆம் நாள் முதல் 28ஆம் நாள் வரை ஹாய்நான் மாநிலத்தில் நடைபெறவுள்ளது. மாறிவரும் உலகிற்கேற்ப ஆசியாவின் எதிர்காலத்தை உருவாக்குதல் என்பது இதன் தலைப்பாகும்.
AI பயன்பாட்டுக்கும் மேலாண்மைக்கும் இடையிலான சமநிலை, எண்ணியல் திறன் கட்டுமானத்தை வலுப்படுத்துதல், எண்ணியல் துறை இடைவெளியைக் குறைத்தல், எண்ணியல் துறையில் ஒன்றுக்கு ஒன்றுடனான இணைப்பையும் தொடர்பையும் முன்னேற்றுதல் முதலியவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.