தெள்ளாறு முத்தாலம்மன் தேரோட்டம்தெள்ளாறு முத்தாலம்மன் தேரோட்டம்

வந்தவாசி,

தெள்ளார் முத்தாலம்மன் கோவில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஸ்ரீ சக்தி முத்தாலம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.

பிறகு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் முத்தாலம்மன் முக்கிய வீதிகளில் வலம் வந்தார். தெள்ளார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

You May Also Like

More From Author