நெல்லை – மதுரை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

Estimated read time 1 min read

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி நெல்லை – கூடல் நகர் இடையே முன்பதிவில்லா விரைவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி தாம்பரம் மதுரை இடையே முன்பதிவில்லா MEMU சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளன. தாம்பரத்தில் இருந்து நாளை (செப்.16) மாலை 5 மணிக்கு புறப்படும் ரயில்(06159),மறுநாள் அதிகாலை 2.20 மணிக்கு மதுரை வந்தடையும். செப்.17ம் தேதி மதுரையில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் ரயில்(06160), இரவு 9.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும். செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல் வழியாக ரயில் இயக்கப்படும்

இதேபோல் நெல்லையில் இருந்து செப்டம்பர் 16ஆம் தேதி மதியம் 1 மணிக்கு புறப்படும் ரயில் (06001), மதுரைக்கு மாலை 5.35 மணிக்கு வந்து பின்னர் இரவு 6.30 மணிக்கு கூடல் நகர் சென்றடையும். மறுமார்க்கத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி கூடல் நகரில் இருந்து மதியம் 12.15 மணிக்கு புறப்படும் ரயில் (06002), மதுரைக்கு மதியம் 12.30 மணிக்கு வந்து மாலை 5.50 மணிக்கு நெல்லை சென்றடையும். சிறப்பு ரயில் சேரன்மாதேவி, தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் வழியாக இயக்கப்படுகிறது.

You May Also Like

More From Author