உடையும் அதிமுக- பாமக கூட்டணி? அதிமுக தலைவர்களை சந்திக்க மறுக்கும் அன்புமணி

Estimated read time 0 min read

இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என பாமக இதுவரை முடிவெடுக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்னை சந்திக்க அதிமுகவினர் நேரம் கேட்டும் இதுவரை அன்புமணி ஒகே சொல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதிமுகவினரும் களப்பணி செய்திருந்தால் 2026 தேர்தலில் குறைந்தது 10 எம்.எல்.ஏக்கள் பாமக வென்று இருக்கும் என்று பாமகவினர் இன்றளவும் பேசி வருகின்றனர். அதிமுக கூட்டணியில் அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பாமகவினர் பம்பரமாக உழைத்தது. ஆனால் பாமக நிற்கும் இடங்களில் அதிமுக உழைக்கவில்லை. கடமைக்கு கூட்டணி என்று இருந்தனர் . அதை கூட்டணி கட்சியினர் தேர்தல் நேரத்தில் மனக்கசப்பு வந்துவிட கூடாது என அமைதியாக கடந்து சென்றனர். அதிமுகவினர் சரியாக வேலை செய்யாததால் தான் பாமக குறைந்த இடங்களில் வெற்றி பெற்றதாக கட்சி தலைவர் அன்புமணி கருதுகிறார். இதனால் அதிமுக மீது அவர் அதிருப்தியில் இருந்து வருகிறார்.

இந்த சூழலில் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என பாமக இதுவரை முடிவெடுக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக மூத்த தலைவர்கள் பாமக தலைவர் அன்புமணியை சந்திக்க நேரம் கேட்டபோதிலும் இதுவரை அவர் நேரம் ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாமக தங்களை அதிகரிக்குமா என்ற சந்தேகம் அதிமுக மூத்த தலைவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மதுராந்தகத்தில் பாமகவிற்கு வாக்கு வங்கி உள்ள நிலையில் அதிமுகவை ஆதரிக்காவிட்டால் கட்சிக்கு பின்னடைவு ஏற்படுத்தும் என்றும் அதிமுக தொண்டர்கள் கருதுகின்றனர். அதிமுகவிற்கு ஆதரவளிக்கும் விவகாரத்தில் அன்புமணி பின்வாங்குவதாகவும், பொதுத்தேர்தலில் நடந்த கசப்பான சம்பவங்களால் அன்புமணி அதிமுக மீது கோபத்தில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

More From Author