மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் சிபிஎம், சிபிஐ வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் (புதன்கிழமை) தொடங்கியது. அதிமுக, தி.மு.க, தவெக, நாம் தமிழர் கட்சி சார்பில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் சிபிஎம், சிபிஐ வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சுகந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக லட்சுமணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
