திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Estimated read time 1 min read

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அவமதிக்கும் வகையில் பேசியதாக தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யைக் கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, முதல்-அமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்து ஒருமையில் பேசினார். சேகர்பாபுவின் பேச்சுக்கு தவெகவினர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையில் பேசிய முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தவெக நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், அமைதியை குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவமதிப்பு உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சேகர்பாபு மீது வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You May Also Like

More From Author