2026ஆம் ஆண்டு சீன சர்வதேச சேவைகள் வர்த்தகக் கண்காட்சி 13ஆம் நாள் பிற்பகல் நிறைவடைந்தது. 400க்கும் மேற்பட்ட உலகளாவிய முன்னணி நிறுவனங்களை ஈர்த்துள்ள இந்தக் கண்காட்சி, புத்தாக்கம், ஏற்றுமதி, திறப்பு ஆகிய மூன்று துறைகளில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கியுள்ளது.
சீனாவின் குறிப்பிடத்தக்க புத்தாக்க திறன் காரணமாக, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தை உருவாக்குவதையும், சீனாவின் புத்தாக்க ஆற்றலை பயன்படுத்துவதையும் பன்னாட்டு நிறுவனங்கள் தேர்ந்தெடுத்துள்ளன. மேலும், 15வது ஐந்தாண்டுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட ‘சேவை துறையை மையமாகக் கொண்டு, சந்தை நுழைவையும் திறப்பையும் விரிவுபடுத்துவது’ என்ற கொள்கை, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நம்பிக்கையை வழங்கியுள்ளது.
