முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாதுகாப்பு குறைப்பு..!!

Estimated read time 1 min read

முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திடீரென பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு போலீஸ் துறை சார்பில் அவருடைய வீட்டுக்கு அளிக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. அவருடைய வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஆயுதப்படை பிரிவுக்கு திரும்ப அழைக்கப்பட்டனர்.

அதுபோல், ‘வி.ஐ.பி.’ வாகன பாதுகாப்பும் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

அவருக்கான பாதுகாப்பு ‘ஒய்’ பிரிவில் இருந்து ‘எக்ஸ்’ பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது. ‘எக்ஸ்’ பிரிவு என்பது அடிப்படை பாதுகாப்பு வழங்குவது ஆகும்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, மத்திய பாதுகாப்பு அமைப்புகளால் அச்சுறுத்தல் மதிப்பீட்டு ஆய்வின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்ட ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது” என்றனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாதுகாப்பு திடீரென குறைக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You May Also Like

More From Author