தவெக அரசின் சமூக நீதித் துறை, தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு SC/ST மாணவர்களுக்கான தனியார் கல்லூரி கட்டண உதவியை கிட்ட தட்ட நான்கு மடங்காக உயர்த்தியுள்ளது.
BSc, BCom., BCom (Hons.) போன்ற படிப்புகளுக்கான ஆண்டு கட்டண உதவி ₹2,850-லிருந்து ₹11,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. MA., MCom., MSc. உள்ளிட்ட சில முதுநிலைப் படிப்புகளுக்கான உதவியும் ₹12,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. BA., BSc., BBA படிப்புகளுக்கான உதவி ₹11,250 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதியதாக சேரும் UG மற்றும் PG மாணவர்களுக்கும் இந்த உயர்த்தப்பட்ட கட்டண உதவி இந்த கல்வியாண்டிலிருந்து பொருந்தும். Ph.D. மாணவர்களுக்கு ₹10,000 வரை உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் தமிழ்நாட்டில் உள்ள தனியார் கல்லூரிகளில் படிக்கும் சுமார் 80,000 மாணவர்கள் பயனடைவார்கள்.
தமிழ்நாடு மாநில SC/ST ஆணையம், கடந்த ஒரு தசாப்தமாக கட்டண உதவியை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில், தவெக அரசு இதை செய்து முடித்திருக்கிறது.
