விஷால் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘ஆம்பள’. சந்தானம் காமெடி இப்படத்தின் ஹைலைட்.
இதே பாணியில் சுந்தர் சி- விஷால் கூட்டணியில் எடுக்கப்பட்ட ‘மதகஜராஜா’ படமும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வரும் படம் ‘புருஷன்’. தமன்னா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு சையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார்.
இந்நிலையில், கோவாவில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் ‘புருஷன்’ படப்பிடிப்பின் போது சண்டைக் காட்சியில் நடிகர் விஷாலுக்கு காயம் ஏற்பட்டுள்ளது
சுந்தர்.சி இயக்கத்தில் தயாராகிவரும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சண்டைக் காட்சி படமாக்கப்பட்டபோது அவரது முழங்காலில் காயம் ஏற்பட்டதால் ஷூட்டிங் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நல்வாய்ப்பாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
