சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள ஓமன் சுல்தான் ஹைதம் உடன் நவம்பர் 2ஆம் நாள் காலை பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், ஆயிரம் ஆண்டுகளாக நீடிக்கும் சீன-ஓமன் நட்புறவு மென்மேலும் ஆழமாக மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், இரு நாடுகளிடையில் பரஸ்பர அரசியல் நம்பிக்கை மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்புகளில் நிறைய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. இரு நாட்டுறவை மேலும் விரிவாக்கி ஆழமாக்குவது இரு தரப்புகளின் கூட்டு உத்திநோக்கு தேர்வாகவும், இரு நாட்டு மக்களின் பொது விருப்பத்துக்கும் பொருத்தமாகவும் இருக்கும் என்றார்.
மேலும், சீன-ஓமன் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 48ஆண்டுகளில் ஓமன் தலைவர் சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டது இதுவே முதன்முறையாகும். இரு நாட்டுறவின் வளர்ச்சிக்கு வலுவான உந்து சக்தியை இப்பேச்சுவார்த்தை கொண்டு வருமென நம்புவதாக ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.
மத்திய கிழக்குப் பிரச்சினையில் நியாயமான நிலைப்பாட்டைச் சீனா வைத்துக் கொண்டுள்ளதை ஓமன் வெகுவாகப் பாராட்டியுள்ளது என்று ஹைதம் தெரிவித்தார்.
சீனத் தரப்புடன் இணைந்து ஒருங்கிணைப்பை நெருக்கமாக்கி சர்வதேச சட்டத்தைப் பேணிக்காத்து பிரதேச மற்றும் உலகின் பாதுகாப்பையும் நிலைத்தன்மையையும் கூட்டாக முன்னேற்ற ஓமன் விரும்புவதாக அவர் கூறினார்.
பேச்சுவார்த்தைக்கு பின், இரு நாட்டுத் தலைவர்கள் விநியோக சங்கிலி, பசுமை வளர்ச்சி, எண்ணியல் நிதி உள்ளிட்ட துறைகளிலுள்ள பல ஒத்துழைப்பு ஆவணங்களின் கையொப்பமிடும் விழாவில் கலந்து கொண்டனர்.
