மத்திய கிழக்கு பகுதியின் அமைதி மற்றும் பாதுகாப்பு பற்றி சீன அரசுத் தலைவர் முன்வைத்த முன்மொழிவுகளையும், ஆப்பிரிக்காவின் சூடான பிரச்சினைகளின் தீர்வில் பல்வேறு தரப்புகள் செயலாக்க முறையில் பங்காற்றுவதற்கான 4 கோட்பாடுகளையும் நடைமுறைப்படுத்தும் விதம், மத்திய கிழக்குப் பிரச்சினைக்கான சீன அரசின் சிறப்புத் தூதர் சாய்ஜுங் ஈரான், ஓமன், சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஆப்பிரிக்க விவகாரத்துக்கான சீன அரசின் சிறப்பு பிரதிநிதி லியு சியேன்ஃபா எத்தியோபியா, ஜிபூட்டி, எகிப்து ஆகிய நாடுகளுக்குச் செல்லவுள்ளார். ஆப்பிரிக்க ஹார்ன் விவகாரத்துக்கான சீன வெளியுறவு அமைச்சகத்தின் சிறப்புத் தூதர் ஹு சாங்சுன் எரிட்ரியாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தையைத் தூண்டி தொடர்புடைய பிரதேசங்களின் அமைதி மற்றும் நிதானத்துக்குச் சீனா மேற்கொள்ளும் முயற்சி நடவடிக்கை இதுவாகும்.
