குதிரைக்கு பதிலாக நான்கு கால்களைக் கொண்ட ரோபோ

Estimated read time 1 min read

குதிரை இல்லாமல் குதிரை வண்டி ஓடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? சீனாவில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இதில் குதிரைக்கு பதிலாக நான்கு கால்களைக் கொண்ட ரோபோ ஒன்று குதிரை வண்டி இழுத்துச் செல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது.

காணொலியில் இளைஞர் ஒருவர் ரோபோவுக்கு கட்டளை கொடுத்ததும், அது முன்னோக்கி நகரத் தொடங்குகிறது. அதனுடன் இணைக்கப்பட்டிருந்த தாங்காவும் நகர்கிறது. இதைப் பார்த்த இணையவாசிகள், விலங்குகளின் பணியை இயந்திரங்கள் மேற்கொள்ளும் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வளர்ந்துவிட்டது என ஆச்சரியம் தெரிவித்துள்ளனர்.

ரோபோவின் உடல் அமைப்பும், நடக்கும் விதமும் குதிரையைப் போன்று இருப்பதால், தூரத்தில் இருந்து பார்க்கும்போது உண்மையான விலங்கு போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. மனிதர்களின் கட்டளையைப் புரிந்து கொண்டு நகரும் வகையில் இந்த தொழில்நுட்பம் செயல்படுவது காணொலியின் முக்கிய அம்சமாக உள்ளது.

இந்த காணொலி உண்மையான சோதனை காட்சியா அல்லது குறிப்பிட்ட நிகழ்ச்சிக்காக உருவாக்கப்பட்ட காட்சியா என்பது குறித்து பதிவில் முழுமையான தகவல்கள் இல்லை. இருப்பினும், குதிரைக்கு மாற்றாக ரோபோவை பயன்படுத்தும் காட்சி என்பதால், சமூக வலைதளங்களில் இது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

You May Also Like

More From Author