23ஆவது சீன-ஆசியான் பொருட்காட்சி துவக்கம்

Estimated read time 1 min read

 

23ஆவது சீன-ஆசியான் பொருட்காட்சி மற்றும் சீன-ஆசியான் வணிக முதலீட்டு உச்சிமாநாடு செப்டம்பர் 17ம் நாள் சீனாவின் குவாங்சி ச்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நன்னிங் நகரில் துவங்கியது. இதில் சீனத் துணைத் தலைமை அமைச்சர் டிங் சுயேஷியாங் கலந்து கொண்டு உரைநிகழ்த்தினார்.

அவர் கூறுகையில் இரு தரப்பின் கூட்டு முயற்சியுடன் நிலையாக இயங்கி வரும் சீன-ஆசியான் தாராள வர்த்தக மண்டலம், பிராந்தியப் பொருளாதாரத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை முன்னேற்றி, உள்ளூர் மக்களுக்கு நடைமுறை நன்மைகளைக் கொண்டு வந்துள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், பிராந்தியத் திறப்பு நிலையின் பன்முக உயர்வு, வர்த்தக முதலீட்டு மேம்பாடு, புதிய துறைகளில் மேலும் ஆழமான ஒத்துழைப்பு, தொடர்பு மற்றும் போக்குவரத்தில் மேலதிக வசதி ஆகியவற்றை முன்னேற்றுவது குறித்தும் அவர் 4 முன்மொழிவுகளை முன்வைத்தார்.

You May Also Like

More From Author