சீன-இந்திய எல்லை விவகாரத்துக்கான கலந்தாலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு பணி அமைப்பு முறையின் 33வது கூட்டம் மார்ச் 25ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் எல்லை மற்றும் கடல் விவகாரப் பிரிவின் தலைவர் ஹூங் லியாங், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கிழக்காசிய பிரிவின் இணைப்பு செயலாளர் தை கோ லன் ஆகியோர் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினர்.
எல்லை வரையறுப்பு, எல்லை கட்டுப்பாடு, அமைப்பு முறை கட்டுமானம், நாடு கடந்த பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு முதலியவை குறித்து சீனாவும் இந்தியாவும் எட்டியுள்ள ஒத்த கருத்துகளின் செயலாக்கம் பற்றி இரு தரப்பினரும் ஆழமாக கருத்துகளைப் பரிமாறிக் கொண்டுள்ளனர்.
பயனுள்ள நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்வது, சீன-இந்திய எல்லை அமைதியைப் பேணிக்காப்பது, 24வது சீன-இந்திய எல்லை பிரச்சினையின் சிறப்பு பிரதிநிதி சந்திப்புக்கு முன்னேற்பாடு செய்வது ஆகியவை இக்கூட்டத்தில் ஒப்பு கொள்ளப்பட்டுள்ளன.
