இந்தியாவின் முன்னணித் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான சென்னை ஐஐடி, பொறியியல் துறைக்கு அப்பாற்பட்டு மருத்துவக் கல்வியிலும் தடம் பதிக்கத் தயாராகி வருகிறது.
எதிர்காலத்தில் ஐஐடி வளாகத்திலேயே சொந்தமாக மருத்துவப் பள்ளி தொடங்கி எம்.பி.பி.எஸ் (MBBS), எம்.டி (MD) மற்றும் பிஎச்.டி (PhD) ஆகிய மருத்துவ பட்டப் படப்புகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக இந்தியா டுடே ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடி-யில் மருத்துவ படிப்பு: மருத்துவக் கல்லூரி தொடங்க இயக்குநர் காமகோடி திட்டம்
