தங்கம் விலை தாறுமாறாக மாறியது..!!

Estimated read time 1 min read

2 மாதங்களாக தங்கம் விலை தினந்தோறும் மாறி வருகிறது. ஈரான் – அமெரிக்க போரானது உலக பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கமே தங்கம் விலையின் இத்தகைய மாற்றத்திற்கு காரணம் என்று சொல்லப்பட்டது.

அதேசமயம், அமெரிக்க டாலர் வலுவிழப்பு, வேலைவாய்ப்பின்மை, பொருளாதார நிலையற்ற தன்மை போன்ற காரணங்களும் தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலைமை மாற வேண்டுமானால், அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும் என்றும், அப்படி உயர்த்தும் பட்சத்தில் உலகளவில் தங்கம் விலை குறையும் என்றும் நிபுணர்கள் கூறிவந்தனர். இந்நிலையில் தான் நேற்று அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை 0.25% உயர்த்தி, வட்டியை 3.75 சதவீதம் முதல் 4 சதவீதமாக நிர்ணயித்திருக்கிறது. இதனால் இனிமேல் தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக இன்று தங்கம் விலை ஏறியிருக்கிறது.

நேற்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,13,240க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.1,040 உயர்ந்து ரூ.1,14,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.130 உயர்ந்து ரூ.14,285க்கு விற்கப்படுகிறது.

நேற்று தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்திருப்பது இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அதே போல வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.260க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 உயர்ந்து ரூ.2,60,000க்கும் விற்கப்படுகிறது.

You May Also Like

More From Author