2வது சீனச் சர்வதேச வினியோகச் சங்கிலி பொருட்காட்சி அண்மையில் நிறைவு பெற்றது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் டிசம்பர் 2ஆம் நாள் கூறுகையில், வெளிநாட்டுத் திறப்பு மற்றும் ஒத்துழைப்பை சீனா முன்னேற்றி, உலக வினியோகச் சங்கிலியின் நிலைத்தன்மையைப் பேணிக்காப்பதற்கான முக்கிய மேடையாக, இப்பொருட்காட்சி திகழ்கிறது. உலக வினியோகச் சங்கிலியின் உறுதித் தன்மை மற்றும் நிலைத்தன்மையைப் பேணிக்காப்பது, உலகப் பொருளாதாரத்தின் தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான முக்கிய உத்தரவாதமாகும்.
இது சர்வதேச சமூகத்தின் பொது நலன்களுக்குப் பொருந்தியது என்றார். மேலும், உயர்தர வளர்ச்சி மற்றும் உயர்நிலை திறப்பில் சீனா தொடர்ந்து ஊன்றி நின்று, அனைவரையும் உள்ளடக்கும் தன்மையுடைய பொருளாதார உலகமயமாக்கத்துக்கு ஆதரவளித்து, வினியோகச் சங்கிலி பற்றிய பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்புகளை ஆழமாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.