கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த படம், ‘லோகா சாப்டர் 1: சந்திரா’. சூப்பர்ஹீரோ ஜானரில் உருவான இப்படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்தது. இதற்கு முன் எந்த மலையாளப் படமும் இவ்வளவு கோடி வசூலை எட்டியதில்லை. இப்படத்துடன் வெளியான மோகன்லாலின் ‘ஹிருதயபூர்வம்’, ஃபஹத் ஃபாசிலின் ‘ஓடும் குதிர சாடும் குதிர’ ஆகிய படங்கள் தோல்வியை தழுவின. இந்த படங்கள் இரண்டும் முன்னரே ஓடிடியில் வெளியாகிவிட்ட நிலையில், ‘லோகா’ தொடர்ந்து திரையரங்கில் ஓடிக் கொண்டிருந்தது.
இதில் நஸ்லென், சாண்டி உள்பட பலர் நடித்திருந்தனர். டொவினோ தாமஸ், துல்கர் சல்மான் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம், மலையாளத்தில் உருவாகி, தமிழ், தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியானது.
இந்த நிலையில் இப்படம் வரும் அக்டோபர் 31 அன்று ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
