பாஜகவில் வானதி சீனிவாசனுக்கு புதிய பொறுப்பு

Estimated read time 0 min read

தமிழக பாஜக பொறுப்பாளராக ராம்மாதவை நியமித்து பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் உத்தரவிட்டுள்ளார்.

பாஜகவில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியர் பிரதேசங்களுக்கு பொறுப்பாளர்கள் மற்றும் இணைப் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி,

தமிழக பாஜக பொறுப்பாளராக ராம் மாதவ்வை நியமித்து பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் உத்தரவிட்டுள்ளார். துணை பொறுப்பாளர்களாக நிர்மல்குமார் சுராணா மற்றும் அருணா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ராம் மாதவ் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். தற்போது பாஜக தேசிய துணைத்தலைவராக உள்ள இவர், இதற்கு முன் ஆர்.எஸ்.எஸ். தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்தவர்.

பாரதிய ஜனதா கட்சியின் கேரளா மாநிலத்திற்கு இணை பொறுப்பாளராக மா.வெங்கடேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தின் பாஜக இணை பொறுப்பாளராக வானதி ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

You May Also Like

More From Author