கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

Estimated read time 0 min read

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் நாளை அதிகனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் சனிக்கிழமை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author