ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலின் 63ஆவது கூட்டத்தில் உக்ரேன் பிரச்சினை பற்றி சீனப் பிரதிநிதி 22ஆம் நாள் உரை நிகழ்த்துகையில், சமீபத்தில் உக்ரைன் நெருக்கடி நிலைமை வேகமாக மாறி வரும் சூழலில், தொடர்ந்து நிகழ்ந்து வரும் தாக்குதல்கள் பற்றியும் இதனால் ஏற்பட்ட பொது மக்கள் உயிரிழப்பு குறித்தும் சீனா ஆழ்ந்த வருத்தம் அடைந்ததாகவும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து, அரசியல் ரீதியில் நெருக்கடிகளுக்குத் தீர்வுகளைத் தேடுவதற்கு ஆக்கப்பூர்வமாக பங்காற்ற சீனா விரும்புவதாகவும் தெரிவித்தார்.
சிக்கலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எளிதான வழிமுறைகள் இல்லை. பேச்சுவார்த்தையை நடத்துவது என்பது இதற்கான ஒரே ஒருத் தீர்வு முறையாகும் என்று சீனப் பிரதிநிதி வலியுறுத்தினார்.
