கொடைக்கானல் சுற்றுவட்டாரத்தில் சாரல் மழை!

Estimated read time 0 min read

கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் அண்ணா சாலை, மூஞ்சிக்கல், செண்பகனூர் போன்ற நகர பகுதிகள் மட்டுமின்றி மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், குண்டுபட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் சாரல் மழையானது பெய்து வருகிறது. பிரதான சாலைகளில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மேலும், கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

You May Also Like

More From Author