நவம்பர் 18ஆம் நாள், ஜி 20 அமைப்பின் 19ஆவது உச்சி மாநாட்டின் முதல் கூட்டத்தில், பட்டினி மற்றும் வறுமை எதிர்த்து போராடுவது குறித்து விவாதம் செய்த போது, பொதுவான வளர்ச்சியின் நியாயமான உலகத்தை கட்டியமைப்பது என்ற தலைப்பில் ஷி ச்சின்பிங் உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில், உலக வளர்ச்சிக்கு சீனா 8 ஆதரவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அறிவித்தார்.
முதலாவது, உயர் தரத்திலான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவை கூட்டாக கட்டியமைப்பதாகும்.
இரண்டாவது, உலகளாவிய வளர்ச்சி முன்மொழிவை நடைமுறைப்படுத்துவதாகும்.
மூன்றாவது, ஆப்பிரிக்காவின் வளர்ச்சிக்கு ஆதரவு அளிப்பதாகும்.
நான்காவது, வறுமை ஒழிப்பு மற்றும் தானிய பாதுகாப்புக்கான சர்வதேச ஒத்துழைப்புக்கு ஆதரவு அளிப்பதாகும்.
ஐந்தாவது, உலகளாவிய அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கங்கள், தெற்குலகிற்கு மேலதிகமான நலன்களை தருவதை முன்னேற்றும் வகையில், சீனா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, ஆப்பிரிக்க ஒன்றியம் ஆகியவை அறிவியல் குறித்த சர்வதேச ஒத்துழைப்பைத் திறக்கும் முன்மொழிவை ஏற்படுத்த வேண்டும்.
ஆறாவது, தெற்குலகிற்கு நலன் தருவது பற்றிய ஜி20 அமைப்பின் செயல்பாட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகும்.
ஏழாவது, ஊழல் எதிர்ப்பு பற்றிய ஜி 20 அமைப்பின் ஒத்துழைப்புகளுக்கு ஆதரவு அளிப்பதாகும்.
எட்டாவது, உயர் நிலை வெளிநாட்டு திறப்பு முறைமையை சீனா முழுமைப்படுத்தி, மிக பின்தங்கிய நாடுகளுக்கான திறப்புப் நிலையை விரிவாக்குவதாகும் என்றார்.」