கனகசபை மீதேறி வழிபட யார், யாருக்கு அனுமதி?- ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Estimated read time 0 min read

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி தரிசனம் செய்ய அனுமதி அளித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தீட்சிதர்கள் தரப்பு ஏற்றுக்கொண்டபின்பு தற்போது அதனை மாற்ற முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து அறநிலையத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்கள், கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதியளித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பொது தீட்சிதர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சௌந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன் மீண்டும் நடைபெற்றது.

அப்போது, தீட்சிதர்கள் தரப்பில், கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய தீட்சிதர்களுக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் அரசியல் சாசன பதவி வகிப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அறநிலையத்துறை சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன், கனக சபை மீதேறி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளித்து ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், அதை ஏற்றுக் கொண்ட தீட்சிதர்கள் தரப்பு தற்போது அதனை மாற்ற முடியாது,தரிசனத்திற்காக வரும் பக்தர்களிடம் தட்டு காணிக்கை பெற்றுவிட்டு அவர்களை அனுமதிக்க முடியாது என்பது சரியானது அல்ல என தெரிவித்தார்.

எம்.என்.ராதா என்ற பக்தர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கனகராஜ், 3 அடி கெண்ட நடராஜரை 30 அடி தூரத்தில் முழுமையான காணமுடியாது, என்றும் கனக சபை மீது யாரும் ஏறி தரிசனம் செய்வது தொடர்பாக 417 தீட்சிதர்கள் மத்தியில் வாக்ககெடுப்பு நடத்தியதில், 150 தீட்டசிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஏறலாம் என 115 பேர் குறிப்பிட்டதாகவும், 150 பேர் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துவிட்டதாக வாதிட்டார். இதில் 115 பேர் ஆதரவு தெரிவித்ததை சுட்டிகாட்டினார்.

இதைத் தொடர்ந்து கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய யார் யாருக்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறித்து மனுவாக தாக்கல் செய்யும்படி தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை அக்டோபர் 9ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author