ஆளில்லா விமானங்களின் ஏற்றுமதி கட்டுப்பாடு பற்றிய இரண்டு அறிவிப்புகளைச் சீன வணிக அமைச்சகம், சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் முதலியவை கூட்டாக வெளியிட்டன. ஆளில்லா விமானங்களின் ஏற்றுமதி கட்டுப்பாடு பற்றிய சீனாவின் கொள்கை குறித்து சீன வணிக அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், உயர் செயல்திறன் கொண்ட ஆளில்லா விமானங்கள் குறிப்பிட்ட இராணுவப் பயன்பாட்டைக் கொண்டுள்ளன. அவற்றின் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை செயல்படுத்துவது சர்வதேச வழக்கமாகும். ஆளில்லா விமானங்களின் முக்கிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடான சீனா, போதுமான மதிப்பீட்டின் அடிப்படையில், ஆளில்லா விமானங்களின்
மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை உரிய முறையில் விரிவுபடுத்த சீனா முடிவு செய்தது. இது எந்தவொரு குறிப்பிட்ட நாட்டையும் குறிவைக்கவில்லை என்றார்.
உலகளாவிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய நிலைப்புத்தன்மையைப் பேணிக்காக்கச் சீன அரசு எப்போதும் பாடுபட்டு வருகின்றது. சிவில் ஆளில்லா விமானங்கள் ராணுவ நோக்கத்துக்காகப் பயன்படுத்துவதைச் சீனா எப்போதும் எதிர்த்து வருகின்றது. மேலும் சிவில் துறையில் ஆளில்லா விமானங்களுக்கான சர்வதேச வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்பைச் சீன நிறுவனங்கள் aமேற்கொள்வதைச் சீன அரசு ஆதரிக்கின்றது என்று அவர் கூறினார்.