“சபரிமலையில் பரபரப்பு….!” ஐயப்பனின் 55 சவரன் தங்கக் கிரீடம் மாயமாகி போலி கிரீடம் வைப்பா….? பக்தர்கள் அதிர்ச்சி….!! 

Estimated read time 1 min read

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், சுவாமிக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட சுமார் 55 சவரன் தங்கக் கிரீடம் காணாமல் போயிருப்பதாகவும், அதற்குப் பதிலாக போலி கிரீடம் வைக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்தி பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2012-ஆம் ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவர், சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான 55.72 சவரன் எடை கொண்ட தங்கக் கிரீடத்தைச் சபரிமலை ஐயப்பனுக்குக் காணிக்கையாக வழங்கியுள்ளார். இந்த விவரங்கள் அனைத்தும் தேவஸ்வம் வாரியத்தின் கோயில் பதிவேடுகளிலும் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன.

சமீபத்தில் கேரள உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சபரிமலை ஐயப்பனின் ஆபரணங்களைச் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. அப்போது சன்னிதான பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த அசல் தங்கக் கிரீடம் மாயமாகி, அதற்குப் பதிலாகப் போலி கிரீடம் மாற்றி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்த குற்றச்சாட்டைப் பற்றிப் பேசிய தேவஸ்வம் வாரியத் தலைவர் கே. ஜெயக்குமார், “தங்கக் கிரீடம் தொலைந்து போகவில்லை என்றும், அசல் கிரீடத்துடன் சேர்த்து அதே போன்ற மாதிரி கிரீடமும் அங்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் திருவாபரண ஆணையர் தெரிவித்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

இருப்பினும், ஆரன்முலாவில் உள்ள பாதுகாப்பு அறையிலும் ஆய்வு நடத்தி, தங்கக் கிரீடம் தொலைந்துபோயிருந்தால் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐயப்பனின் திருவாபரணங்கள் குறித்த விரிவான அறிக்கை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில், முழுமையான உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author