2026ஆம் ஆண்டு ஏபெக் தலைமைச் செயல் அதிகாரி உச்சிமாநாடு பற்றிய செய்தியாளர் கூட்டம்

சர்வதேச வர்த்தக முன்னேற்றத்துக்கான சீனக் கவுன்சில் செப்டம்பர் 29ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. நவம்பர் 17, 18 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள 2026ஆம் ஆண்டு ஏபெக் தலைமைச் செயல் அதிகாரி உச்சிமாநாட்டுக்கான ஆயத்தப் பணிகள் தற்போது தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு உச்சிமாநாடு பல்வேறு தரப்புகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள் இவ்வுச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் ஆர்வம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அமேசான், வால்மார்ட், ஆப்பிள், கூகுள், எக்ஸான் மொபில், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனங்கள் இவ்வுச்சிமாநாட்டில் பங்கெடுப்பதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளன. ஆசிய-பசிபிக் தொழில் மற்றும் வணிக ஒத்துழைப்புக்கு அமெரிக்கத் தொழில் மற்றும் வணிகத் துறை அளித்த முக்கியத்துவத்தையும், தற்போது சீன-அமெரிக்கத் தொழில் மற்றும் விநியோகச் சங்கிலிகளின் நெருங்கிய ஒத்துழைப்பு உறவையும் இது வெளிப்படுத்தியுள்ளது என்றும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

You May Also Like

More From Author