இனப் பாகுபாடு எதிர்ப்பில் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் சீனா

 

டர்பன் அறிக்கை மற்றும் செயல் திட்டம் ஏற்றுகொள்ளப்பட்டதன் 25வது ஆண்டு நிறைவை நினைவு கூரும் ஐ.நா. பொது பேரவையின் உயர்மட்டக் கூட்டம் 28ஆம் நாள் நடைபெற்றது. அப்போது, இனப் பாகுபாடு எதிர்ப்பில் அமைதி மற்றும் வளர்ச்சியின் முக்கியத்துவத்தை ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ஃபூ சோங் வலியுறுத்தினார்.

மேலும் அவர் கூறுகையில், உயிர்வாழ்வு மற்றும் உயிரின் பாதுகாப்பு என்பது அனைத்து மனித உரிமைகளையும் அனுபவிப்பதற்கான அடிப்படையாகும் என்றார். ஐ.நா. சாசனத்தின் நோக்கங்களையும் கோட்பாடுகளையும் கடைப்பிடித்து, அமைதியான வழிகளின் மூலம் சர்வதேச மோதல்கள் மற்றும் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நாகரிகப் பன்முகத்தன்மை மனித முன்னேற்றத்திற்கான உந்துசக்தியாகும் என்றும், மனிதகுலத்தின் பொது விழுமியத்தையும், பல்வேறு இனங்கள் மற்றும் நாகரிகங்களுக்கு இடையிலான பரிமாற்றம், பரஸ்பர கற்றல் மற்றும் இணக்கமான சகவாழ்வையும் ஊக்குவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும், மனிதகுலத்திற்கான பொது எதிர்கால சமூகத்தை உருவாக்க அனைத்து தரப்புகளுடன் இணைந்து பணியாற்ற சீனா விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author