ஷி ச்சின்பிங்கிற்குப் பிடிக்கும் பழமொழி நிகழ்ச்சி
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் செர்பியாவில் அரசு முறை பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமம் தயாரித்த “ஷி ச்சின்பிங்கிற்குப் பிடிக்கும் பழமொழி நிகழ்ச்சி” உள்ளூர் நேரப்படி மே 8ஆம் நாள் முதல் செர்பியாவின் தேசிய வானொலித் தொலைக்காட்சி நிறுவனத்தின் மூலம் ஒளிப்பரப்பப்படவுள்ளது. இதற்கு முன், இந்நிகழ்ச்சியின் முன்னோட்ட காட்சி மற்றும் பிரச்சாரக் காட்சி உள்ளூர் நேரப்படி மே 4ஆம் நாள் முதல் அந்நாட்டின் பல முக்கிய ஊடகங்களில் ஒளிப்பரப்பப்பட்டு வருகின்றன.
கூட்டுச் செழுமை, உயிரினச் சுற்றுச்சூழல் நாகரிகம் முதலியவை, இந்நிகழ்ச்சியின் கருப்பொருட்களாகும். சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் முக்கிய உரைகள், கட்டுரைகள், உரையாடல்கள் முதலியவற்றிலுள்ள சீனப் பழமொழிகள் இந்நிகழ்ச்சியின் மூலம் அறிந்து கொள்ள முடியும். நாட்டின் ஆட்சிமுறை பற்றிய அவரது தலைச்சிறந்த ஞானம் மற்றும் ஆழமான வரலாற்று பண்பாட்டுத் திறனை இந்நிகழ்ச்சி வெளிப்படுத்துகிறது.