சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே தூதாண்மைஉறவு நிறுவப்பட்டதன் 35ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சீன அரசுத் தலைவர்
ஷிச்சின்பிங்கும் சிங்கப்பூர் அரசுத் தலைவர் தர்மன் சண்முகரத்தினமும்
ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் ஷிச்சின்பிங்
கூறுகையில், இரு நாட்டு தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் 35ஆவது ஆண்டு நிறைவை
வாய்ப்பாக கொண்டு, சிங்கப்பூருடன் இணைந்து, ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கையை மேலும்
ஆழமாக்கி, உயர் நிலை ஒத்துழைப்புகளை முன்னெடுத்து, நெருக்கமான மானுடப்
பரிமாற்றத்தை ஊக்குவித்து, பலதரப்பு வர்த்தக அமைப்புமுறை மற்றும் சர்வதேச
உறவுகளின் அடிப்படைக் கோட்பாடுகளை கூட்டாக பேணிக்காத்து, சீன-சிங்கப்பூர் பன்முக
மற்றும் உயர் தரமான கூட்டாளி உறவின் மேம்பாட்டை முன்யோசனையுடன் கூடிய பார்வையுடன் முன்னேற்ற
வேண்டும் என்று சீனா விரும்புவதாக தெரிவித்தார்.
தர்மன் சண்முகரத்தினம் கூறுகையில், சிங்கப்பூரும்
சீனாவும் தொடர்ந்து நெருக்கமான ஒத்துழைப்பு மேற்கொண்டு, இரு தரப்பு உறவை புதிய
உயர் நிலைமைக்கு கொண்டு வர இயலும் என்று நம்புவதாக தெரிவித்தார்.
தவிர, சீனத் தலைமையமைச்சர் லீ ட்சியாங்,
சிங்கப்பூர் தலைமையமைச்சர் லாரன்ஸ் வோங்க் ஆகிய இருவரும் அதே நாள்
ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.