சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங், டிசம்பர் 13ஆம் நாள் முற்பகல், வியட்நாம் தலைநகர் ஹனோயில், அந்நாட்டின் அரசுத் தலைவர் வு வென்துலாங்குடன் சந்தித்துரையாடினார்.
இப்பயணம், இவ்வாண்டில், வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் இறுதியான பயணமாகும். இரு நாட்டுறவு, சீனாவின் வெளியுறவில் குறிப்பாக, அண்டை நாடுகளுடனான வெளியுறவில் சிறப்பு தகுநிலையில் உள்ளது என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
வியட்நாமுடன் இணைந்து, நெடுநோக்குத் தொடர்பை வலுப்படுத்தி, நெடுநோக்கு ரீதியில் சீன-வியட்நாம் மனிதக் குலத்தின் பகிரப்பட்ட எதிர்காலம் கொண்ட பொது சமூகத்தின் உருவாக்கத்தை விரைவுபடுத்தி, இரு நாட்டு மக்களுக்கு நன்மை பயக்க வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் விருப்பம் தெரிவித்தார்.
அதே நாளில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங், வியட்நாம் தலைமையமைச்சர் பாம் மிங் சிங்குடன் சந்திப்பு நடத்தினார்.