2025ஆம் ஆண்டில் உலகம் மேலும் சிறப்பாக இருக்குமா? மிக பெரிய வளரும் நாடான சீனா உலகிற்கு ஆக்கப்பூர்வ ஆற்றலை எவ்வாறு கொண்டு வருகின்றதா?
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நிகழ்த்திய புத்தாண்டு உரையின் மூலம், கடந்த ஓராண்டில் சீனாவின் வளர்ச்சி சாதனைகளை சர்வதேச சமூகம் அறிந்து கொண்டு, சீனாவின் தன்னம்பிக்கையை உணர்ந்து கொண்டுள்ளது. இந்த நம்பிக்கை, உலகிற்கு புதிய ஒரு ஒளியை தந்துள்ளது.
சீனப் பொருளாதார வளர்ச்சியின் வலிமைமிக்க உறுதித்தன்மையிலிருந்து இந்த நம்பிக்கை வருகிறது. 2024ஆம் ஆண்டு சீன அரசு வெளியிட்ட கொள்கைகளின் மூலம், சீனப் பொருளாதாரம் மீட்சியடைந்துள்ளது. சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, ஒரு கோடியே 30 லட்சம் கோடி யுவானை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனப் பொருளாதாரத்தின் செழுமையான புதிய வளர்ச்சியிலிருந்து இந்த நம்பிக்கை வருகிறது. கடந்த ஓராண்டில் புதிய தொழில்களும், புதிய மாதிரிகளும் காணப்பட்டன. புதிய எரியாற்றல் வாகனங்களின் ஆண்டு உற்பத்தி அளவு, முதன்முறையாக ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. சீனாவின் தற்சார்பு புத்தாக்க ஆற்றல் உயர்ந்து வருவது, பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் அதே வேளையில், உலகப் பொருளாதார மீட்சிக்கும் புதிய இயக்கு ஆற்றலை வழங்கும் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர்.
கடந்த ஓராண்டில், உலகப் பொருளாதார அதிகரிப்புக்கு சீனா பங்காற்றும் விகிதம், சுமார் 30 விழுக்காடாக இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருதரப்பு மற்றும் பலதரப்பு அரங்குகளில் தனது முன்மொழிவுகளையும் கருத்துக்களையும் சீனா முன்வைத்துள்ளது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர் தர கட்டுமானம், உலக மேலாண்மையின் சீர்திருத்தத்தை ஆக்கமுடன் முன்னேற்றுவது, “உலகின் தென் பகுதியின்” ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை ஆழமாக்குவது உள்ளிட்ட சீனத் திட்டங்கள் மற்றும் சீன செயல்கள் உலகின் அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணிக்காப்பதற்கு மேலதிக சாதகமான ஆற்றலை உட்புகுத்தியுள்ளன.
2025ஆம் ஆண்டு, உள்நாட்டு வெளிநாட்டு சிக்கலான அபாயங்கள் மற்றும் அறைகூவல்களை எதிர்நோக்கிய போதிலும், சீனா இன்னல்களைப் பொருட்படுத்தாமல், சீன நவீனமயமாக்கத்தை தொடர்ந்து உறுதியுடன் முன்னேற்றும். சீன மக்கள் மேலும் இன்பமான வாழ்க்கையைப் பெறுவதை முன்னேற்றும் அதே வேளையில், உலகிற்கு மேலதிக வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கும்.