புதிய ரக எரியாற்றல் அமைப்பு முறைக் கட்டுமானத்தின் 15ஆவது ஐந்தாண்டு திட்டம் ஒன்றைச் சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையமும் சீனத் தேசிய எரியாற்றல் பணியகமும் அண்மையில் வெளியிட்டன. பசுமையான கரி குறைந்த பாதுகாப்பு மற்றும் உயர் செயல் திறன் வாய்ந்த புதிய ரக எரியாற்றல் அமைப்பு முறையை 2030ஆம் ஆண்டில் அடிப்படையில் உருவாக்க வேண்டுமென அதில் முன்வைக்கப்பட்டது.
படிம அல்லாத எரியாற்றலின் நுகர்வு விகிதத்தை 25விழுக்காடாக எட்டுதல், காற்று மற்றும் சூரிய ஆற்றல் மூலம் மின்சார உற்பத்தித் திறன் விகிதத்தை 50விழுக்காட்டிற்கு மேல் எட்டுதல், நுண்ணறிவு மற்றும் உயர் செயல் திறன் கொண்ட புதிய ரக எரியாற்றல் அடிப்படை வசதிகளின் அமைப்பு முறையை விரைவாக கட்டியமைத்தல், உலக எரியாற்றல் அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்கத்தில் முன்னணி நாடுகளின் வரிசையில் இணைதல், தேசிய அளவில் ஒருமைப்பட்ட மின்சார சந்தை அமைப்பு முறையை அடிப்படையில் உருவாக்குதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய இலக்குளாக முன்வைக்கப்பட்டன.
