சீன வணிக அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அரியவகை கனிமங்கள் சார்ந்த தொழில்நுட்ப ஏற்றுமதிக்கு உடனடி கட்டுப்பாட்டு நடவடிக்கையை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
சீனாவிற்கு வெளியே உள்ள நாடுகள் மற்றும்
பிராந்தியங்களுக்கு அரிய வகை கனிமங்கள் தொடர்பான பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு
வெளிநாட்டு அமைப்புகளும் தனிநபர்களும் இரட்டைப் பயன்பாட்டு பொருட்களின்
ஏற்றுமதிக்கான உரிமத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்று சீனா முடிவு செய்துள்ளதாகவும்
வணிக அமைச்சகம் வெளியிட்ட இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.