மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஐடிகள், ஐஐஎம்கள், என்ஐடிகளில் 19,190 காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
மத்தியப் பல்கலைக்கழகங்கள், இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் ( IIT ) , இந்திய மேலாண்மை நிறுவனங்கள் ( IIM ) மற்றும் தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றில் காலியாக இருந்த 19,190 பணியிடங்களை மத்திய அரசு நிரப்பியுள்ளதாக, மத்திய கல்வி துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்துள்ளார்.
இந்த 19,190 பணியிடங்களில் 11,847 இடங்கள் ஆசிரியப் பணியிடங்கள் ஆகும். செப்டம்பர் மாதம் 2022 ஆம் ஆண்டிலிருந்து இந்த காலி பணியிடங்களை நிரப்பும் பணியில் ஈடுபட்டு நோவேமேற் 2023-யில் மொத்தமாக காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளார்.
மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஐடிகள் , ஐஐஎம்கள் மற்றும் என்ஐடிகளில் , இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியருக்கான அங்கீகரிக்கப்பட்ட EWS (பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவு) ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்த கேள்விக்கு சுபாஷ் சர்க்கார்,
ஆட்கள் சேர்ப்பு, ராஜினாமா மற்றும் மாணவர் வலிமை ஆகியவற்றைப் பொறுத்து பல்வேறு ஆசிரியப் பணியாளர்களில் காலியிடங்களின் எண்ணிக்கை மாறும் என்று கூறினார்.
மேலும், “இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடிஎஸ்) நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (என்ஐடி) மற்றும் இந்திய மேனேஜ்மென்ட் இன்ஸ்டிடியூட் (ஐஐஎம்) ஆகிய நிறுவனங்கள் சிறந்த, திறமையாளர்களை ஆசிரியப் பணிக்கு நியமிக்கின்றனர்.
காலியிடங்களை நிரப்புவது இந்த நிறுவனங்களுக்கிடையில் ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். மேலும் இந்த நிறுவனங்கள் காலியிடங்களை நிரப்பச் சிறப்பு ஆட்சேர்ப்பு இயக்கங்களையும் கொண்டுள்ளது,” என்று கூறினார்.