சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையமும், சீனத் தேசிய எரியாற்றல் பணியகமும் 23ஆம் நாள் வெளியிட்ட தகவல்களின்படி, 2030ஆம் ஆண்டு வரை, சீனாவின் சூரிய வெப்பம் மூலம் மின்சார உற்பத்தி சாதனங்களின் ஆற்றல் ஒரு கோடியே 50 இலட்சம் கிலோவாட்டை எட்டக் கூடும். இதில், ஒரு கிலோவாட் மணி மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான செலவு நிலக்கரி மின்சாரத்திற்கான செலவுக்குச் சம்மாக இருக்கும்.
எதிர்காலத்தில், இத்துறை சீரான வளர்ச்சிச் சுழற்சியை நுழைவை விரைவுபடுத்தி, இத்தொழில் துறை மற்றும் சந்தையை மேலும் விரிவுபடுத்த சீனா பாடுபடும். தவிரவும், சூரிய வெப்பம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதை முன்னேற்றுவதன் மூலம், சீனாவின் மின்சார ஆற்றல் கட்டமைப்பின் வலிமை மற்றும் தற்சார்பு கட்டுப்பாடுத்தக் கூடிய திறன் வலுப்படுத்தப்படும். புதிய ரக எரியாற்றல் கட்டமைப்புக் கட்டுமானம், கார்பன் உச்சம் மற்றும் கார்பன் சமநிலை எனும் இலக்கை நனவாக்குவதற்கு வலிமையாக உத்தரவாதம் செய்யப் பாடுபடும் என்று சீனத் தேசிய எரியாற்றல் பணியகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
