11.93 மீட்டர் விட்டமும் 180 மீட்டர் நீளமும் கொண்ட புதிய ரக சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரம் ஜனவரி 5ஆம் நாள், மத்திய சீனாவிலுள்ள ஹுபெய் மாநிலத்தின் இச்சாங் நகரிலுள்ள நீர்வளத்துறை திட்ட பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
சீனா சொந்தமாக தயாரித்துள்ள இந்த இயந்திரமானது, கடினப்பாறைகள் நிறைந்த இடத்திலேயே துளையிடுதல் பணியும் பொருத்துதல் பணியும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளும் திறனை கொண்டது குறிப்பிடத்தக்கது.