காலநிலை மாற்றம் குறித்த ஐ.நாவின் கட்டமைப்பு உடன்படிக்கையில் பங்கேற்ற தரப்புகளின் 31வது மாநாடு(COP31)அண்மையில் நிறைவுப் பெற்றது. அரசியல் தீர்மானம் குறித்து இம்மாநாட்டில் ஒத்தக் கருத்துக்கள் எட்டப்படவில்லை என்பது, 2009ஆம் ஆண்டு முதல் இதுவரை இதுவே முதல்முறையாகும். சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் 40 நாடுகளைச் சேர்ந்த 10032 பேரிடம் நடத்திய கருத்துக் கணிப்பில், காலநிலை ஆட்சிமுறை விவகாரத்தில், எரியாற்றல் பிரச்சினையின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது என்றும், எரியாற்றல் வளர்ச்சி முறை மாற்றம், பல்வேறு நாடுகள் சமாளிக்க வேண்டிய முக்கிய சவாலாக மாறியுள்ளது என்றும், புதிய எரியாற்றலின் நெடுநோக்கு தகுநிலை மிகவும் முக்கியமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாரம்பரிய புதைபடிவ எரியாற்றலின் விநியோக நெருக்கடி, உலகளாவிய சவாலாக மாறியுள்ளதாக 77.8 விழுக்காட்டினர் தெரிவித்தனர். அத்துடன், எரியாற்றல் அமைப்புமுறையின் வளர்ச்சியை, தூய்மை, பல்வகைமை, உயர் செயல்திறன் ஆகியவற்றைக் கொண்ட திசைக்கு முன்னேற்றுவது, உலகளாவிய எரியாற்றல் அறைக்கூவல்களைச் சமாளிப்பதற்கான முக்கிய வழிமுறையாகும் என்று 77.3 விழுக்காட்டினர் தெரிவித்தனர். தவிரவும், சீனாவின் புதிய எரியாற்றல் தொழிலின் வளர்ச்சி, உலக எரியாற்றல் வளர்ச்சி முறையின் மாற்றத்தை முன்னேற்றுவதற்கு முக்கிய பங்காற்றியுள்ளது என்று 74.6 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
