மதுரையில் மத நல்லிணக்க கூட்டமைப்பு பேரணி மற்றும் தவ்ஹித் ஜமாத் சார்பில் அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்ற இடைக்காலத் தீர்ப்புக்கு எதிராக இன்று மதுரையில் நடைபெறும் அமைதிப் பேரணியில் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் மமக தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்க இருந்தனர். மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் வகையில் இப்பேரணி நடைபெறுவதாகவும், தீர்ப்புக்கு எதிரான தமிழக அரசின் மறுசீராய்வு மனுவை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் மதுரையில் மத நல்லிணக்க கூட்டமைப்பு பேரணி மற்றும் தவ்ஹித் ஜமாத் சார்பில் அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காவல்துறை தடையை மீறி பேரணி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டால் போராட்டக்காரர்களை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.
