தங்கம் விலை! அதிரடி உயர்வு

Estimated read time 1 min read

தங்கத்தின் விலைச் சரிவு திடீரென்று ஒருவித உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. டி.வி.யைத் திறந்தால், சமூக வலைத்தளங்களுக்கு வந்தால், பெரும்பாலோர் தங்க நகையை வாங்கிக் குவிப்பதற்கான புதிய வாய்ப்பு வந்துவிட்டதைப் போல் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதுவும் ஒரு பவுன் தங்கம் 92 ஆயிரம் என்றவுடன் காணாததைக் கண்ட ஒருவித மயக்கம் வந்துவிட்டது. மேலும் 10 முதல் 15 சதவிகிதம் அளவுக்கு சரிவு ஏற்படலாம் என்று வேறு ஆரூடங்கள் சொல்கிறார்கள்.

இன்று (நவம்பர் 20) தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.135 உயர்ந்து ரூ.11,600 -க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1080 கஉயர்ந்து, ரூ.92,800-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.175-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,75,000-க்கு விற்பனையாகிறது.

அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் நிறுத்தப்பட்டுள்ளதால் தங்கம் விலை குறைவதாக பலர் நினைத்தாலும், அமெரிக்க பொருளாதார நிலையற்ற தன்மையே தங்கம் விலை குறைய காரணம் என விளக்குகின்றனர்.தங்கத்தின் விலை ஒரே ஆண்டில் சுமார் 36% சரிந்துள்ளது! ஜனவரியில் உச்சத்தைத் தொட்ட தங்கம், தற்போது கணிசமாகக் குறைந்துள்ளது. ஆனால் 2027 இறுதிக்குள் மீண்டும் சுமார் 30% உயரக்கூடும் என்று Goldman Sachs கணித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author