3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்ற முடியாது- மாநகராட்சி, நகராட்சி அலுவலர்களுக்கு செக்!

Estimated read time 1 min read

நீண்டகாலமாக ஒரே இடத்தில் பணியாற்றுவோர் தான் ஊழல், முறைகேடுகளை தொடர்ந்து செய்து வருவதாக புகார் எழுந்ததையடுத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலர்கள் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றத் தடை விதிக்கும் புதிய இடமாற்ற ஆணையை நகராட்சி நிர்வாகத்துறை வெளியிட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் வெளியான இந்த அரசாணை, தமிழ்நாடு முழுவதும் உள்ள பேரூராட்சி ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலர்கள் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றத் தடை விதிக்கும் புதிய இடமாற்ற ஆணையை நகராட்சி நிர்வாகத்துறை வெளியிட்டுள்ளது.பேரூராட்சி இயக்கக நிர்வாகத்தின் கீழ் வரும், சம்பள நிலை Pay Level 20 மற்றும் அதற்கு கீழ் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் இது பொருந்தும். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023-ன் கீழ் வரும் அனைவரும் இதில் அடங்குவர். இந்த விதி தமிழ்நாடு பேரூராட்சி கீழ்நிலை பணி, தமிழ்நாடு அமைச்சுப் பணி, தமிழ்நாடு பேரூராட்சி பணி, மற்றும் தமிழ்நாடு பேரூராட்சி சுகாதாரம் மற்றும் துப்புரவு பணிகளில் உள்ள அனைத்து பிரிவு ஊழியர்களுக்கும் பொருந்தும்.

அதாவது ஒரு அலுவலகத்தில் 3 வருடம் முடித்தவர்கள் கட்டாயமாக வேறு அலுவலகத்துக்கு மாற்றப்படுவார்கள். மே 31-ம் தேதிக்குள் 3 வருடம் முடிகிறவர்களும் இதில் அடங்குவர். ஒரே அலுவலகத்தில் 3 வருடத்துக்கு மேல் யாரும் தொடர முடியாது. அதன்படி, ஆண்டுதோறும் ஏப்ரல் 1 முதல் மே 31 வரை மட்டுமே பணியிட மாறுதல்கள் செய்யப்படும் (விண்ணப்பங்கள் மார்ச் 1 முதல் 31 வரை) என்றும், ஓராண்டுக்குள் ஓய்வு பெறுபவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சில பிரிவினருக்கு விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளது. 3 வருடம் முடிந்து டிரான்ஸ்பருக்கு தகுதியானவர், ஓய்வு பெற 1 வருடம் அல்லது அதற்கு குறைவாக இருந்தால், வேறு ஊருக்கு மாற்றப்பட மாட்டார். அதே ஊரில் சீட் மாற்றம் மட்டும் செய்யப்படும். அதுவும் முடியவில்லை என்றால், அதே பணியில் ஓய்வு வரை தொடரலாம். ஆனால் அந்த பணி Sensitive பணி என்றால் வேறு ஊருக்கு மாற்றப்படுவார். கணவன் – மனைவி ஒரே இடத்தில் வேலை பார்க்க விரும்பி விண்ணப்பித்தால், 1 வருடம் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற விதி பொருந்தாது. அதே போல் மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக மாற்று, டயாலிசிஸ், இதய அறுவை, புற்றுநோய், மூளை கட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கும் 1 வருட விதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author