போர் மற்றும் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில், பிரிட்டனைச் சேர்ந்த 56 வயது நீச்சல் வீரர் லூயிஸ் ப்யூ 15 கிலோமீட்டர் தூரம் நீந்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஓமன் நாட்டின் கடற்கரைப் பகுதியில் மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த நீச்சல் பயணத்தின் நோக்கம், போரால் கடல் சுற்றுச்சூழலுக்கும் கடல்வாழ் உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதாகும். இவர் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்துடன் தொடர்புடையவர்.
இந்த நீச்சல் பயணம் மிகவும் ஆபத்தானதாக அமைந்தது. தண்ணீரில் இறங்கி சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு, சில கிலோமீட்டர் தொலைவில் இருந்த எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. குண்டுவெடிப்பின் அதிர்வால் கடல் நீரே அதிர்ந்ததாக லூயிஸ் ப்யூ தெரிவித்துள்ளார். வானில் போர் விமானங்களையும் அவர் பார்த்துள்ளார். இதனால் உடனடியாகக் கடலை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைத்தாலும், தனது பயணத்தைத் தொடர்ந்துள்ளார்.
I have just completed a three-day swim through the Strait of Hormuz to draw attention to the devastating environmental consequences of war.
Just 30 minutes after I began swimming, an oil tanker was struck a few kilometres away. The explosions rocked the sea around me. Over the following days, I witnessed further attacks on commercial shipping and saw vessels engulfed in flames.
War causes immense human suffering. Lives are lost, families are torn apart, and homes are destroyed. But there is another casualty that receives far too little attention: nature itself.
The Strait of Hormuz is one of the most beautiful places I have ever visited. Towering mountains rise above spectacular fjords. There are coral reefs and mangrove forests, and waters home to dolphins, sea turtles and dugongs. It is one of the great natural wonders of the world.
Yet this extraordinary place is now caught in the middle of a war. Oil tankers, gas carriers and other merchant ships are being attacked. The environmental consequences will last for decades.
My message is simple: Stop the fighting. Open the Strait. Clean up the pollution.
Please help share this message.
#HormuzSwim
— Lewis Pugh (@LewisPugh) November 21, 2026
அடுத்தடுத்த நாட்களில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களையும் அவர் நேரில் கண்டுள்ளார். ஒரு எரிவாயுக் கப்பல் தாக்கப்பட்டு தீப்பற்றி எரிந்ததையும், அதைச் சுற்றியிருந்த கடல் பகுதியில் தீ பரவியதையும் பார்த்ததாகக் கூறியுள்ளார். இந்தத் தாக்குதல்களால் கடலில் எண்ணெய் மற்றும் ரசாயனக் கழிவுகள் கலக்கக்கூடும் என்றும், அது கடல்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணை என்பது எண்ணெய், எரிவாயு கொண்டு செல்லும் கடல் வழித்தடம் மட்டுமல்ல; டால்பின்கள், கடல் ஆமைகள், டுகோங் உள்ளிட்ட அரிய உயிரினங்கள் வாழும் முக்கியமான கடல் பகுதியாகும். இங்கு பவளப்பாறைகள் மற்றும் சதுப்புநிலக் காடுகளும் உள்ளன. போர் காரணமாக இந்தச் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டால், அதன் விளைவுகள் பல தசாப்தங்களுக்குத் தொடரக்கூடும் என்று லூயிஸ் ப்யூ எச்சரித்துள்ளார். போரை நிறுத்த வேண்டும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும், கடலில் ஏற்பட்ட மாசுபாட்டைச் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் உலக நாடுகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
