கொளத்தூரில் காலியான நாற்காலி- விஜய் கையில் இருக்கும் அந்த 2 பெயர்கள்

Estimated read time 0 min read

71 நாட்கள் மருத்துவப் போராட்டத்துக்கு பிறகு, 75 வயதில் கொளத்தூர் தவெக எம். எல். ஏ வி.எஸ். பாபு காலமானார். ஆறு மாத பதவிக்குள்ளேயே வந்த இந்த இழப்பால் இப்போது இடைத்தேர்தல் வரப்போகிறது. அதில் தவெக சார்பில் போட்டியிடப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Image

விஜய் கையில் இருக்கும் அந்த லிஸ்ட்டில் முதலில் இருப்பவர் தணிகா… கட்சி பணியில் ஆரம்பம் முதலே முன்னணியில் நின்றவர். விஜய் மக்கள் இயக்கத்தில் தொடங்கி, தமிழக வெற்றிக் கழகத்தில் தொடர்ந்தவர். பூத் கமிட்டி முதல் கட்சி பணி வரை, கொளத்தூரில் களமிறங்கி உழைத்தவர். பாபு மருத்துவமனையில் இருந்தபோதும், கட்சி பணிகளை தொடர்ந்து கவனித்தவர். நவம்பர் 13 குழந்தைகள் தின விழாவில், முதல்வர் விஜய்யின் பள்ளி நிகழ்ச்சி ஏற்பாட்டிலும் முன்னின்று செயல்பட்டவர்!

அடுத்த பெயர் பாபுவின் குடும்பம்! நாற்பது ஆண்டு அரசியல் அனுபவம், வடசென்னையில் நீண்டகால அறிமுகம், திமுகவும் அதிமுகவும் கடந்து, இறுதியில் தவெகவில் இணைந்தவர் பாபு. அவருக்கு பிரகாஷ், சதீஷ்குமார், விக்னேஷ், பாலு என நான்கு மகன்கள்… ஒரு மகளும் அவருக்கு உண்டு! இதில் மூத்த மகன் பிரகாஷா? அல்லது அரசியல் பணிகளில் உடனிருந்த சதீஷ்குமாருக்கா? தந்தையின் மருத்துவமனை நாட்களிலும், இறுதி சடங்கு நிகழ்வுகளிலும் முன்னின்ற மகனுக்கு வாய்ப்பா? என்ற எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது. பாபுவின் மகனை நிறுத்தினா தமிழக வெற்றி கழகம் எளிதில் வெற்றி பெறும் என கட்சியினர் வெளிப்படையாகவே சொல்ல ஆரம்பித்துவிட்டனர். காரணம் பாபுவின் நீண்டகால மக்கள் அறிமுகம்… குடும்பத்தின் உள்ளூர் செல்வாக்கு… அனுதாப வாக்குகள் கிடைக்கலாம் என்ற கட்சியினரின் கணக்கும் இருக்கிறது.

பாபுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற விஜய், அவரது மகனை அரவணைத்து ஆறுதல் கூறியது, அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது. இப்போது விஜய்யின் முன் இரண்டு பெயர்கள்… தணிகாவுக்கு வாய்ப்பளிப்பாரா? தந்தையின் பாதையில் மகனை நிறுத்துவாரா? ஒருபுறம் கட்சிக்காக உழைத்த நிர்வாகி… மறுபுறம் மறைந்த தலைவரின் குடும்ப வாரிசு என்ற குழப்பம் நிலவுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author