சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், துணைத் தலைமையமைச்சருமான டிங் சூசியாங், சிங்கப்பூரில் அந்நாட்டு துணைத் தலைமையமைச்சர் கான் கிம் யோங்கைச் சந்தித்தார். மேலும், அவரும் கான் கிம் யோங்கும் சீனா-சிங்கப்பூர் இருதரப்பு ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணையத்தின் 22வது கூட்டம், சீனா-சிங்கப்பூர் சூட்சோ தொழிற்பூங்காவுக்கான ஒருங்கிணைப்பு மன்றத்தின் 27வது கூட்டம், சீனா-சிங்கப்பூர் தியான்ஜின் சுற்றுச்சூழல் நகரத்துக்கான ஒருங்கிணைப்பு மன்றத்தின் 18வது கூட்டம், சீனா-சிங்கப்பூர் (சோங்சிங்) உத்திநோக்கு இணைப்பு திட்டத்துக்கான ஒருங்கிணைப்பு மன்றத்தின் 10வது கூட்டம் ஆகியவற்றுக்கு தலைமை தாங்கினர்.
சுசோ தொழிற்பூங்கா, தியான்ஜின் சுற்றுச்சூழல் நகரம், சீனா-சிங்கப்பூர் (சோங்சிங்) உத்திநோக்கு இணைப்பு திட்டப்பணி, குவாங்சோ அறிவு நகரம் உள்ளிட்ட அமைப்புமுறைக்குள் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒத்துழைப்புகளின் முன்னேற்றத்தை இக்கூட்டம் தொகுத்துரைத்தது. மேலும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஒத்துழைப்பு, பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் முதலிய அம்சங்களில் கவனம் செலுத்தப்பட்டன. வளர்ந்து வரும் அதிநவீன துறைகள், நிதி ஒத்துழைப்பு, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு ஆகிய துறைகளில் 29 சாதனைகள் படைக்கப்பட்டன.
