தமிழகத்தில் தங்கம் விலை குறைவு: ஒரு சவரன் ரூ.1,10,720-க்கு விற்பனை!

Estimated read time 0 min read

அமெரிக்க ஃபெடரல் வங்கியானது தற்போது கொள்கை மாற்றங்களை மேற்கொண்டிருப்பதால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது தங்கள் ஆர்வத்தை திருப்பியுள்ளனர். இதுவும் உலக அளவில் தங்கம் விலை உயர்வதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

தங்கம் விலை ஏற்கனவே ரூ. 1.10 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், இன்னும் அதிகரித்தால் சாமானியர்களுக்கு தங்கம் வெறும் கனவாகவே மாறிவிடும் என்ற கவலை எழுந்திருக்கிறது.

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று (அக்.12) சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.

நேற்று (அக்.11) ஒரு சவரன் ரூ.111,040க்கு விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.1,10,720க்குவிற்பனையாகிறது.

அதேபோல், நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.13,880க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.40 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிலோ ரூ.2,45,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

You May Also Like

More From Author