வணிக சிலிண்டர் விலை ரூ.66.50 அதிகரிப்பு..!!

Estimated read time 1 min read

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் ஓட்டல்கள், உணவகங்கள், பேக்கரிகள், டீக்கடைகள், கேன்டீன்கள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்களுக்கு சமையல் கியாஸ் செலவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் ஒவ்வொரு மாதமும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலைகள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை சென்னையில் ரூ.66.50 உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி, இதுவரை விற்பனை செய்யப்பட்ட விலையைவிட ரூ.66.50 அதிகரித்து, 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் தற்போது ரூ.2,984-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரத்தில், வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

You May Also Like

More From Author