யேமனின் தற்காலிக தலைநகரான அடன் நகரில் உள்ள அதிபர் மாளிகையின் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் மாளிகையின் அருகே பலமுறை பெரிய சத்தத்துடன் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாக அப்பகுதி மக்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுடன் மோதலில் ஈடுபட்டு வரும் ஹூதி அமைப்பினர், தற்போது நேரடியாக யேமன் அரசாங்கத்தின் மீதும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்தத் தாக்குதலில் மாளிகையின் பாதுகாப்பில் ஈடுபட்ட இரண்டு பாதுகாப்புப் பணியாளர்கள் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், தாக்குதல் நடந்த பகுதியில் இருந்த யேமன் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
செங்கடல் பகுதியில் தொடர் முடக்கம் மற்றும் பல்வேறு நாடுகளுக்கு எதிரான தாக்குதல்களால் உலக நாடுகளிடையே பெரும் குழப்பமும் போர்ப்பதற்றமும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஈரான் ஆதரவு பெற்ற இந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள், தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்த யேமன் நாட்டின் மீது தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் சமாதான ஒப்பந்தங்கள் மீறப்பட்டு மோதல்கள் அதிகரித்து வருவதோடு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுடனான மோதல் போக்கினாலும் மத்திய கிழக்கில் பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது.
Four ballistic missiles struck the Maashiq Palace, the seat of Yemen’s internationally recognized government in Aden, Saudi Al-Hadath reports. Prime Minister Shaya al-Zindani and government ministers were unharmed. https://t.co/xeRD4r2L7K
— Ariel Oseran أريئل أوسيران (@ariel_oseran) October 15, 2026
“>
சிறுசிறு ஆயுதங்களைக் கொண்டு பலத்த பாதுகாப்பையும் தாண்டி இவர்கள் நடத்தி வரும் இந்த அதிரடித் தாக்குதல்கள் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
